ரூ. 2,000 கோடியில் 60,000 புதிய வீடுகள்-குடிசை மாற்று வாரியம் கட்டுகிறது
சென்னை: குடிசை மாற்று வாரியம் மூலம் 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி செலவில் 60,000 புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன.
சட்டசபையில் வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2008-09ம் ஆண்டில் வீட்டுவசதி வாரியம் மூலம் ரூ.2,000 கோடி செலவில் 22,000 வீடுகள் கட்ட அரசு தீர்மானித்துள்ளது.
தனியாருடன் இணைந்து 24 இடங்களில் வீடுகள் கட்டப்படவுள்ளன. சென்னையில் கே.கே.நகர், தெற்காசிய விளையாட்டு கிராமம், கோயம்பேடு மற்றும் வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் முதலில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
குடிசை மாற்று வாரியம் மூலம் 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி செலவில் 60,000 வீடுகள் கட்டப்படும்.
சென்னை, மதுரை, கோவையில் குடிசை மாற்று வாரியத்தின் 9,692 பழுதடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு ரூ.263.77 கோடி செலவில் மீண்டும் புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
சென்னை, மதுரை மற்றும் கோவை நகரங்களை குடிசைப் பகுதிகளற்ற நகரங்களாக 2013ம் ஆண்டிற்குள் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய சீரமைப்பு திட்டத்தின் கீழ் 35,270 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1208.55 கோடியில் கட்டப்படும்.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டடுக்கு கீழ்தள இருசக்கர வாகன நிறுத்துமிடம் ரூ.9 கோடியில் கட்டப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications