இலங்கை ராணுவத் தாக்குதலில் 12 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் நடந்த மோதலில் 11 விடுதலைப்புலிகளும், பொதுமக்கள் தரப்பில் ஒருவரும் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மாகாணப் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா பகுதியில் உள்ள வேடமாகுளம், விநாயகர்குளம் ஆகிய இடங்களில் இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 புலிகள் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணம் அருகே நாகர்கோவிலில் நடந்த சண்டையில் ஒரு விடுதலைப்புலி பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாக இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வெளிஓயாவில் ஒரு விடுதலைப் புலியையும் மற்றும் முகமலை பகுதியில் 2 புலிகளையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக இந்த மையம் தெரிவித்துள்ளது.
வெளிஓயா பகுதியில் நடந்த மற்றொரு மோதலில் 3 விடுதலைப்புலிகள் பலியாயினர். இத்துடன் நேற்று பலியான போராளிகளின் எண்ணிக்கை 11 ஆனது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் கைத்தடி என்ற இடத்தில் 34 வயது தமிழ் வாலிபரை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications