இன்போசிஸ் நிகர லாபம் ரூ. 4,659 கோடி
பெங்களூர்: இந்திய சாப்ட்வேர் நிறுவன ஜாம்பவானான இன்போசிஸ் டெக்னாலஜிஸ் 2007-08 நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.4,659 கோடியை திரட்டியுள்ளது.
கடந்த மார்ச் 31 உடன் முடிந்த 2007-08 நிதியாண்டின் இறுதி காலாண்டில் ரூ.1,249 கோடி நிகர லாபம் அடைந்துள்ளதாக இன்போசிஸ் டெக்னாலிஜிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய காலாண்டு இறுதியில் ரூ.1,231 கோடி மட்டுமே நிகரலாபமாக ஈட்டியிருந்தது. இதன்மூலம் 3 மாதங்களுக்குள் 9 சதவீத வளர்ச்சியை அந்த நிறுவனம் அடைந்துள்ளது.
முந்தைய 2006-07 நிதியாண்டில் ரூ.3,856 கோடியை நிகரலாபமாக ஈட்டிய இன்போசிஸ் நிறுவனம் சென்ற நிதியாண்டில் ரூ.4,659 கோடியை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சென்ற நிதியாண்டின் நிகர விற்பனை ரூ.16,692 கோடி என்றும், அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.13,893 கோடி என்றும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் கூடுதலாக 5,947 ஊழியர்களை நியமித்துள்ளது.
இந்நிலையில் 2008-09 நிதியாண்டில் இருந்து நிகர லாபத்தில் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் பங்கு ஆதாய விகிதத்தை 30 சதவீதம் வரை அளிக்கப் போவதாக இன்போசிஸ் முடிவு செய்துள்ளது.
இன்போசிஸ் பங்குதாரர்களுக்கு தற்போது ரூ.5 முகப்பு மதிப்பு பங்குக்கு தலா இறுதி ஆதாயமாக ரூ.7.25ம், சிறப்பு ஆதாயமாக ரூ.20ம் வழங்கவுள்ளது. வரும் நிதியாண்டில் தனது நிகர வர்த்தகம் ரூ.20000 கோடியை எட்டும் என்று இன்போசிஸ் கணித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications