தெலுங்கானா: சிரஞ்சீவிக்கு விஜயசாந்தி எச்சரிக்கை

விஜயசாந்தி, சிரஞ்சீவியுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர். இருவரும் 'மேட் பார் ஈச் அதர்' என்று சொல்லும் அளவுக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்தவர்கள். சிரஞ்சீவி மெகா ஸ்டாராக வளர்ந்தது போல லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்தவர் விஜயசாந்தி. இருவருக்கும் தனித் தனியாக பெருமளவில் ரசிகர் கூட்டம் உண்டு.
சிரஞ்சீவிக்கு முன்பே தனிக் கட்சி ஆரம்பித்தவர் விஜயசாந்தி. இந்த நிலையில் சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் குறித்து விஜயசாந்தி கருத்து ெதரிவித்துள்ளார். அதில் தெலுங்கானா குறித்த தனது நிலையை தெளிவுபடுத்தாமல் சிரஞ்சீவியால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிரஞ்சீவி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவர் கட்சி தொடங்கினால் தெலுங்கானா பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தனி தெலுங்கானா மாநிலம் அமைய ஆதரவு தெரிவிக்கும் வரை எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் என்றாலும் தெலுங்கானாவில் அரசியல் செய்ய முடியாது.
சிரஞ்சீவி அரசியல் நடத்த வேண்டும் என்றால் தெலுங்கானா பற்றி தெளிவாக அறிவிக்க வேண்டும். தனி தெலுங்கானாவை ஆதரிக்காதவர்கள் தெலுங்கானா பகுதிக்குள் ஓட்டு கேட்டு கால் எடுத்து வைக்க முடியாது.
சினிமா மோகத்தில் ஓட்டு போடுபவர்கள் யாரும் இங்கு இல்லை. தெலுங்கானா பகுதி மக்கள் படும் கஷ்டம், போராட்டம், உணர்வுகள் எனக்கு நன்கு தெரியும்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே அரசியலுக்கு வந்து விட்டேன். பா.ஜனதா தனி தெலுங்கானாவை ஆதரித்ததால் அக் கட்சியில் சேர்ந்தேன். தனி தெலுங்கானாவை சந்திரபாபு நாயுடு எதிர்த்ததால் அதை பா.ஜ.க. கைவிட்டது. எனவே நான் அக் கட்சியில் இருந்து வெளியே வந்து தாய் தெலுங்கானா கட்சியை தொடங்கினேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க தீர்மானம் நிறைவேற்றினால் பா.ஜனதாவில் மீண்டும் சேருவது பற்றி யோசிப்பேன்.
தனித்துப் போட்டி:
வரும் தேர்தலில் எனது கட்சி தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவ ட்டங்களில் தனித்து போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி செயல் இழந்து விட்டது. எனவே சினிமா நடிகர்கள் மூலம் அந்த கட்சிக்கு உயிரூட்ட சந்திரபாபு நாயுடு முயற்சி எடுத்து வருகிறார் என்று கூறியுள்ளார் விஜயசாந்தி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications