கருணாநிதி பிறந்த நாளன்று சேது கால்வாயில் கப்பல்: ஆற்காடு வீராசாமி
மதுரை: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை அளிக்கும். அப்படி நடந்தால் அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சேது கால்வாயில் முதல் கப்பல் ஓடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரூ. 4.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய துணை மின் நிலையத்திற்கு ஆற்காடு வீராசாமி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை தரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் பின்னர் திட்டம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டு முடிக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சேது கால்வாயில் முதல் கப்பல் ஓடுவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.
கடந்த பாஜக ஆட்சியில் இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். இப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் சேது சமுத்திரத் திட்டத்திற்கு விடிவு பிறந்துள்ளது.
திமுக ராமருக்கு எதிரான கட்சியல்ல. ஆனால் ஆதாம் பாலம் ராமரால் கட்டப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்.
சேது சமுத்திரத் திட்டத்தால் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்லும் நிலையும் மாறும், எரிபொருளும் சேமிக்கப்படும்.
தமிழகத்தை உபரி மின்சாரம் உடைய மாநிலமாக மாற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 90 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 12 மின் நிலையங்கள் வரவுள்ளன என்றார் வீராசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications