கமாண்டோ படை பாதுகாப்பு கோரும் ஜெ!
சென்னை: தனக்கு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஜெயலலிதா கோரியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் குண்டு துளைக்காத கார் தரப்பட வேண்டும் என்றார்.
முன்பே அவருக்கு குண்டு துளைக்காத அம்பாசிடர் கார் கொடுக்கப்பட்டதையும், ஆனால், அது அம்பாசிடர் என்பதால் அதை ஜெயலலிதா திருப்பி அனுப்பிவிட்டதையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது.
இதையடுத்து அந்தக் கார் மீண்டும் ஜெயலலிதாவுக்கு தரப்பட்டது. இந்த முறை அதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார்.
இந் நிலையில் ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதாவின் சார்பில் கூடுதல் மனு ஒன்றை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில்,
எனக்கு இன்னும் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எனது வீட்டுக்கு ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் போதிய பயிற்சி பெற்றவர்கள் இல்லை. எனக்கு கமாண்டோ படை போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் மாதம் அண்ணா சமாதிக்கு சென்றபோதும் அதன் பிறகு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சமாதி, எம்.ஜி.ஆர். வீடு ஆகியவற்றுக்கு சென்ற போதும் தமிழக அரசு எனக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை.
அது தொடர்பாக கூடுதல் தகவல்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்ற நீதிபதி வரும் 21ம் தேதிக்குள் கூடுதல் தகவல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஆனால், ஏற்கனவே ஜெயலலிதா தாக்கல் செய்த வழக்கு விசாரணை முழுவதும் முடிந்துவிட்டதால் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications