2 அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
சென்னை: சட்டசபை நடவடிக்கைககளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் வி.பி.கலைராஜன், கோ.ஹரி ஆகியோரை இந்த கூட்டத் தொடர் முழுவதும் கலந்து கொள்ள தடை விதித்து சபாநயாகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை சட்டசபை கூடியதும் தலைமைச் செயலாளர் திரிபாதி, உளவுத்துறை ஏடிஜிபி உபாத்யாயா ஆகியோரது தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக வந்த செய்தி குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுகவினர் கோஷமிட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி விளக்கமளிக்க முயன்றபோதும் அவரை பேச விடாமல் அதிமுகவினர் அமளி செய்தனர்.
இதையடுத்து அவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைககளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் வி.பி.கலைராஜன், கோ.ஹரி ஆகியோரை இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநயாகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.
ஓ.பி. பேட்டி:
முன்னதாக அவையிலிருந்து வெளியேறிய அதிமுக சட்டசபை துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசுகையில்,
அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் போன் பேச்சு ஒட்டு கேட்கப்படுகிறது. ஏற்கனவே இது போன்று ஒரு சம்பவம் நடந்தது.
தற்போது தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி ஆகியோர் இடையே நடந்த உரையாடல் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கம் கேட்க முயன்றால் அனுமதி அளிக்காமல் வெளியேற்ற உத்தரவிடுகிறார்கள்.
கர்நாடகத்தில் இது போன்று போன் ஒட்டு கேட்பு பிரச்சினை வந்தபோது அப்போது அங்கு முதல்வராக இருந்த ஹெக்டே பதவியை ராஜினாமா செய்தார்.
நத்தம் விசுவநாதன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அதற்கான விசாரணை அதிகாரியை மாற்றுவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பேச எங்களுக்கு உரிய வாய்ப்பு தரப்படவில்லை என்றார்.
முன்னதாக அதிமுகவினரை தொடர்ந்து மதிமுக எம்எல்ஏக்களும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications