வெடிகுண்டு பதுக்கியதாக பொடா வழக்கு-நக்கீரன் கோபால் விடுதலை
சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால் மீது தொடரப்பட்ட பொடா வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2001ம் ஆண்டு சத்தியமங்கலம் காட்டில் ராஜாமணி என்ற போலீஸ் உளவாளி கொல்லப்பட்டார். இதையடுத்து போலீஸார் நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து உளவாளி கொலையில் தொடர்புடையதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரது இருப்பிடத்திலிருந்து நாட்டுத் துப்பாக்கி, தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்புகளின் துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து குண்டுகள் வைத்திருந்ததாக கூறி கோபால் மீதான வழக்கு பொடா வழக்காக மாற்றப்பட்டது.
இந்த வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோபால் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்ைல என்று நீதிபதி தியாகராஜன் தீர்ப்பளித்து கோபாலை விடுவித்து உத்தரவிட்டார்.
முன்னாள் திமுக எம்.பி. சண்முகசுந்தரம் கோபால் சார்பில் இந்த வழக்கில் ஆஜரானார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications