கோவை யார்டில் என்ஜின் தடம் புரண்டது-ரயில்கள் தாமதம்
கோவை: கோவை ரயில் நிலைய யார்டில் ஷன்டிங் ரயில் என்ஜின் தடம் புரண்டது. இதனால் காலை 6.30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
கோவையில் இருந்து சென்னைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 6.30 மணிக்கு புறப்படுகிறது. இரவில் யார்டில் நிறுத்தப்படும் இந்த ரயில் பெட்டிகள் காலையில் ஷன்டிங் என்ஜின் மூலம் மீண்டும் பிளாட்பாரத்திற்கு கொண்டு வரப்படும்.
அதேபோல் இன்று அதிகாலை 5 மணிக்கு யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை இழுத்து வர ஷன்டிங் ரெயில் என்ஜின் சென்றது.
ஷன்டிங் ரயில் என்ஜின், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் உள்ள பகுதிக்கு வருவதற்காக லைன்மேன் டிராக்கை மாற்றினர். அப்போது ஷன்டிங் என்ஜின் டிராக் மாறக்கூடிய இடத்தில் சென்று கொண்டிருந்ததை லைன்மேன் கவனிக்கவில்லை. இதனால் ஷன்டிங் ரயில் என்ஜின் தடம் புரண்டது.
இதையடுத்து என்ஜினை டிரைவர் உடனடியாக நிறுத்தினார். தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடம் புரண்ட ஷன்டிங் ரயில் என்ஜினை தண்டவாளத்தில் தூக்கி வைக்க, மீட்பு என்ஜின் ஈரோட்டிலிருந்து வரவழைக்கப்பட்டது.
காலை 8.15 மணிக்கு மீட்பு என்ஜின் மூலம் தடம் புரண்ட ஷன்டிங் ரயில் என்ஜின் தண்டவாளத்தில் தூக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து காலை 6.30 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதமாக காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
இதனால் மற்ற ரயில்கள் மாற்று லைன் வழியாக ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் பிளாட்பாரங்களுக்கு கொண்டு வரப்பட்டன.
கோவையில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து ரெயில்கள் தடம்புரண்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேரன் எக்ஸ்பிரசின் பெட்டிகள் தடம்புரண்டன. அடிக்கடி ரயில்கள் தடம் புரள என்ன காரணம் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications