பெரா வழக்கு- சசிகலா மீது நடவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி
ென்னை:
அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் (பெரா) கீழ் சசிகலா, சுதாகரன், இளவரசி, பாஸ்கர் ஆகியோர் மீது மத்திய அமலாக்கப் பிரிவு போலீசார் கடந்த 1995ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 2002ம் ஆண்டு பெரா சட்டத்தை பெமா சட்டமாக மத்திய அரசு மாற்றியது. இதையடுத்து பெரா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகலா மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சசிகலா. அந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், பெரா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தொடர்ந்து நடத்தலாம் என்று பெமா சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே சசிகலா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்தது சரியானதுதான். சசிகலா மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications