புடின் கல்யாணச் செய்தி தவறு: ரஷ்ய இதழ் பல்டி
ரஷ்யாவிலிருந்து வெளியாகும் மாஸ்கோவ்ஸ்கி இதழில் 56 வயதாகும் புடினும், 24 வயது கபயேவாவும் காதலிப்பதாகவும், இருவரும் ஜூன் 15ம் தேதி கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், புடினும், அவரது மனைவி லுட்மிலாவும் விவாகரத்து செய்து விட்டதாகவும் அது கூறியிருந்தது.
ஆனால் இவை அனைத்தும் வதந்தி, தவறான செய்தி என்று மாஸ்கோவ்ஸ்கி தற்போது பல்டி அடித்துள்ளது. தவறான செய்தியை வெளியிட்டதற்காக அது மன்னிப்பும் கோரியுள்ளது.
இதுகுறித்து மாஸ்கோவ்ஸ்கி தனது இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், இந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செய்தியால் பலருக்கும் மன வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த செய்தியில் உண்மையைத் தவிர அனைத்தும் உள்ளதை ஒப்புக் கொள்கிறோம். எங்களது தவறை ஏற்றுக் கொள்கிறோம்.
இப்படி ஒரு தவறான செய்தியை வெளியிட்டு, நாட்டின் முக்கிய பிரமுகர்களை அவமானப்படுத்தியதற்காக வருத்தப்படுகிறோம் என்று கூறியுள்ளது மாஸ்கோவ்ஸ்கி.
முன்னதாக மாஸ்கோவ்ஸ்கியின் செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்த அலினா, உடனடியாக இந்த செய்திக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என மாஸ்கோவ்ஸ்கியை எச்சரித்திருந்தார்.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!













Click it and Unblock the Notifications