ஐபிஎல் முதல் மோதல்: பெங்களூரை சுருட்டியது கொல்கத்தா!

இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் அமைப்பின் முதலாவது டுவென்டி 20 போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
இந்தப் போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், திராவிட் தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற திராவிட் முதலில் ரைடர்ஸை பேட்டிங் செய்ய கூறினார். 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை கோல்கத்தா ரைடர்ஸ் அதிரடியாக குவித்தது.
பெங்களூர் சேலஞ்சர்ஸ் அணியில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கும்ப்ளே, தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆகியோர் நேற்று விளையாடவில்லை. இதனால் திராவிட் அணி பந்து வீச்சில் வீரியம் இல்லை.
இந்த நிலையில் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய நியூசிலாந்து வீரர் மெக்கல்லத்தின் சூறாவளி ஆட்டத்தால் மைதானமே அதிர்ந்தது.
73 பந்துகளில் 9 பவுண்டரிகள் 14 மெகா சிக்ஸர்களை அடித்து 158 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் மெக்கல்லம். அவருக்கு முன்பு திராவிட் அணியின் பந்து வீச்சாளர்கள் ஒன்றுமில்லாமல் போய் விட்டனர்.
கங்குலி 10, ரிக்கி பாண்டிங் 20, ஹுசே 12 ரன்களுடன் அவுட்டானார்கள்.
இறுதியில் 20 ஓவர்களில் 222 ரன்களை ரைடர்ஸ் அணி குவித்தது.
இதைத் தொடர்ந்து சாலஞ்சர்ஸ் பேட்டிங் செய்தனர். முதல் ஓவரிலேயே, இஷாந்த் பந்து வீச்சில் கேப்டன் திராவிட் ரன் எதுவும் எடுக்காமல் 'டக்' அவுட் ஆனார்.
தொடர்ந்து ரைடர்ஸ் பந்துவீச்சில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. 9வது விக்கெட் பேட்ஸ்மென் பிரவீன் மட்டும் 19 ரன்கள் எடுத்து இரட்டை இலக்கத்தை எட்டினார்.
முடிவில் 15.1 ஓவரில் வெறும் 82 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது பெங்களூர் அணி.
ரைடர்ஸ் அணியின் பௌலர் அகார்கர் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறித்தார். கங்குலி, அசோக் டிண்டா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க












Click it and Unblock the Notifications