முன்னாள் பாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மருமகள் சாவில் மர்மம்
தூத்துக்குடி: முன்னாள் பாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குருவுக்கு மருமகள் முறை வரும் உறவுக்காரப் பெண் கல்யாணமான 4 மாதங்களில் மர்மமான முறையில் இறந்தார். இந்த சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயகொண்டம் அருகே உள்ள காடு வெட்டியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவர் அபுதாபியில் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தவமணி. இவர்களது மகள் பரிமளா.
முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி குருவின் உறவினர்தான் அமிர்தலிங்கம். அவருக்கு மருமகள் முறை வருவார் பரிமளா.
தூத்துக்குடி சிப்காட் அருகேயுள்ள தனியார் தொழிற்சாலையில் என்ஜீனியராக பணியாற்றி வந்த பரிமளா ஊழியர் குடியிருப்பில் தங்கியிருந்தார். இவரது பக்கத்து அறையில் நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த பினு சகாயம் என்பவர் இருந்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்படவே அவர்கள் ஓரே அறையில் தங்கினர்.
இந்நிலையில் சென்னையில் என்ஜீனியராக பணியாற்றும் பினுசகாயத்தின் அண்ணன் பென்சேவியர் சகாயத்தை கடந்த 4 மாதங்களுக்கு முன் பரிமளா திருமணம் செய்தார். கணவன்-மனைவி இருவரும் சென்னையில் பெரம்பூரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 4ம் தேதி பரிமளா சென்னையில் இருந்து கிளம்பி தூத்துக்குடியில் உள்ள தனது தோழியும், கணவரின் தங்கையுமான பினுசாகயம் வீட்டிற்கு வந்தார். காலை பினு சகாயம் வேலைக்கு சென்றுவிடவே பரிமளா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலை 3 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக பினு சகாயத்திற்கு தகவல் வந்தது.
இதனையடுத்து அங்குள்ள கேன்டீன் ஊழியர்கள் சிலரின் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பரிமளா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் வந்து பரிமாளவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பரிமாளவின் பெற்றோர் மற்றும் அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தூத்துக்குடி வந்தனர். பரிமாளவின் உடலில் காயங்கள் இருப்பதை அவர்கள் பார்த்தனர். அதன்பிறகு இறந்து கிடந்த வீட்டை பார்வையிட்ட அவர்கள் இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலைதான் என்றும் போலீசில் தெரிவித்தனர்.
தூத்துக்குடி ஆர்டிஓ கலைமணி இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் உண்மை நிலை தெரியும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என அவர் உறுதியளித்தார். இதை தொடர்ந்து பரிமளா உடல் பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஓப்படைக்கப்பட்டது.
பரிமளா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டரா என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications