பயணிகளுக்கு பாதுகாப்பு - ரயில்களில் கமாண்டோ படை

கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆயுதம் ஏந்திய கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில்வே எஸ்பி சாரங்கன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சாரங்கன் கூறுகையில், கோடை விடுமுறை என்பதால் ரயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. சமுக விரோதிகளும், கொள்ளையர்களும் இதை பயன்படுத்திக் கொண்டு பயணிகளிடம் கொள்ளையில் ஈடுபடுவார்கள்.
இதை தடுக்கும் வகையில் ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர் ரயில்களில் அதிரடி சோதனை செய்வார்கள். அவர்களுக்கு ஏகே 47 போன்ற நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அவசியம் ஏற்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளையர்களை பிடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கம்போல ரயில்வே பாதுகாப்பு படையும், ரயில்வே போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
குற்றங்களை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையுடன் மாவட்ட போலீசாரும் இணைந்து செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications