நளினி மகள் ஆரித்ரா எங்கே? தேடுகிறது உளவுத்துறை

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற நளினி, முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது மகள் ஆரித்ரா என்ற மேகரா நளினியுடன் சிறையில் வளர்ந்தார். பின்னர் முருகனின் தாயாருடன் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்து லண்டன் சென்று ஆரித்ரா தங்கியிருந்தார். தற்போது அவர் லண்டனில் இல்லையென்று உளவுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆரித்ரா நார்வேயில் இருந்ததாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும் தற்போது அவர் நார்வேயில் இருக்கிறாரா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.
ஆரித்ராவின் இருப்பிடத்தை அறிய உளவுத்துறையினர் ஆர்வம் காட்டுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வேலூர் சிறைக்குச் ெசன்று நளினியை பிரியங்கா சந்தித்தார். அதேபோல ஆரித்ராவையும் அவர் சந்திக்க முயலுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நளினி, பிரியங்கா சந்திப்பு: நீடிக்கும் மர்மம்
இதற்கிடையே நளினி, பிரியங்கா சந்திப்பு குறித்த மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது. சிறையில் அவர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தையின் பல பகுதிகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிலமுக்கிய கட்சிகள், முக்கியப் பிரமுகர்களுக்கும், ராஜீவ் காந்தி படுகொலைக்கும் தொடர்பு இருப்பதாக பிரியங்கா சந்தேகப்படுகிறார். அதுதொடர்பாக அவர் நளினியிடம் விரிவாகப் பேசியுள்ளார். இந்த விஷயங்கள் வெளியே வராமல் மறைக்கப்பட்டுள்ளன.
தான் சந்தேகப்படும் முக்கியப் பிரமுகர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நளினியிடம் கேட்டுள்ளாராம் பிரியங்கா.
இந்த நிலையில் நளினியை பிரியங்கா சந்தித்தது, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு காங்கிரஸ் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள அமைதி தூது என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் மூலம், போர்ப் பாதையிலிருந்து விடுதலைப் புலிகள் விலகி வர வேண்டும், அமைதித் தீர்வுக்கு உடன்பட வேண்டும் என்று மறைமுகமாக காங்கிரஸ்கட்சி கோரிக்கை விடுப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும் என அரசியல் தரப்பில் கூறப்படுகிறது.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி அடிக்கும் இன்னொரு ஸ்டண்ட் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் முனுமுனுக்கப்படுகிறது.
விலைவாசி உயர்வு, இடதுசாரிகளின் முட்டுக்கட்டை என ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கலில் காங்கிரஸ் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலையில் அதிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப நடந்துள்ள முயற்சியே இந்த சந்திப்பு என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நளினி விடுதலை ஆவாரா?
இந்த நிலையில் நளினியை விடுதலை செய்வது தொடர்பாக அவரது தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை உறுதி செய்யும் வகையில் நளினி தொடர்பான கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications