சத்தியமூர்த்தி பவனுக்கு பாதுகாப்பு கேட்டு காங். மனு
சென்னை: காங்கிரஸ் கோஷ்டிப் பூசலால் வன்முறை ஏற்படலாம் என்ற அச்சத்தில் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு காங்கிரஸ் கட்சி விண்ணப்பித்துள்ளது.
சமீபத்தில் கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். முன்னாள் அமைச்சர் பிரபுவின் ஆலோசனையின் பேரில் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. மாற்றப்பட்டவர்கள் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்.
நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் கோவையில் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு கோரி காங்கிரஸ் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணா நிலைய காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைமை நிலைய செயலாளர் ராஜன் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில் கோவை மாவட்ட தலைவர்கள் மாற்றத்தை எதிர்த்து அங்கு ஒரு தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதேபோல சத்தியமூர்த்தி பவனுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ அவர்கள் போராட்டம் நடத்தக் கூடும் எனத் தெரிகிறது.
எனவே இங்கு உண்ணாவிரதம் நடப்பதைத் தடுக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவன் கடந்த காலங்களில் பல போராட்டங்கள், வன்முறைகள், மோதல்களைச் சந்தித்துள்ளது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை ஒரு கோஷ்டியினர் உள்ளே புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவமும் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.
-
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications