எய்ட்ஸ் நோயாளியை விட்டு சிறுமிகளை கற்பழிக்க வைத்த பெண் கைது
விருதுநகர்: தேர்தல் முன் விரோதம் தொடர்பாக, எய்ட்ஸ் பாதித்த தனது அண்ணனை விட்டு இரு சிறுமிகளை கற்பழிக்க வைத்த கொடூரப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அந்த எய்ட்ஸ் நோயாளியும் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் சமீபத்தில் உள்ளாட்சித் தேரத்லில் போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து வெற்றி பெற்ற பெண்ணின் மீது கோபம் கொண்டார். அவரைப் பழிவாங்க தீர்மானித்தார். இவரது அண்ணன் அய்யப்பன். இவர் ஒரு எய்ட்ஸ் நோயாளி. இதனால் இவரது மனைவி சின்னம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.
தனது அண்ணனை வைத்து பழிவாங்கும் படலத்தைத் தொடங்கினார் வேளாங்கண்ணி. தேர்தலில் வெற்றி பெற்ற பெண்மணிக்கு, 12 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரை தனது வீட்டுக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தார் வேளாங்கண்ணி. பின்னர் தனது அண்ணனை விட்டு கற்பழிக்க விட்டார்.
இதேபோல அய்யப்பன், தனக்கு மகள் முறை வரும் 15 வயது சிறுமியையும் கொடூரமாக கற்பழித்தார்.
இந்த நிலையில் இரு சிறுமிகளுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அடிக்கடி காய்ச்சல், சோர்வு, உடலில் புண்கள் ஏற்படுதல், மற்றும் திடீர் உடல் நலக்குறைவு போன்றவை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இரு சிறுமிகளுக்கும் அரசு மருத்துவ மனையில் ரத்த பரிதோதனை செய்தபோது, இருவருக்கும் எச்ஐவி தாக்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இரு சிறுமிகளின் பெற்றோர்களுக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் வேளாங்கண்ணியின் அக்கிரமச் செயல் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications