பேச அனுமதி இல்லை-சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை: உடுமலைப்பேட்டையில் நடந்த திமுக தேர்தலின்போது நடந்த வன்முறை தொடர்பாக பேச அனுமதி தரப்படாததைக் கண்டித்து சட்டசபையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இன்று சட்டசபையில் பூஜ்ய நேரத்தின்போது அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, உடுமலைப்பேட்டையில் நடந்த திமுக உட்கட்சித் தேர்தலின்போது மோதல் ஏற்பட்டது. அப்போது டி.எஸ்.பி ஈஸ்வரனை திமுகவினர் சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து விவாதிக்க உடுமலைப்பேட்டை அதிமுக உறுப்பினர் சணமுகவேல் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். அதிகுறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஆனால் பன்னீர் செல்வம் தொடர்ந்து பேச சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதிக்க மறுத்து அமருமாறு கூறினார். இது உள்கட்சி விவகாரம். இதுகுறித்து இங்கு பேச அனுமதிக்க முடியாது என்றார்.
தீர்மானத்தை விரைவாக எடுக்குமாறு சபாநாயகரை உறுப்பினர்கள் வலியுறுத்த முடியாது. அது சபாநாயகரின் உரிமை என்றும் கூறினார்.
அப்போது எழுந்த நிதியமைச்சர் அன்பழகன், கட்சிப் பிரச்சினைகளை விவாதிக்கும் களமாக சட்டசபையை மாற்றக் கூடாது. அதற்கு சபாநாயகரும் அனுமதிக்கக் கூடாது என்றார்.
இதையடுத்து அதிமுகவினர் தொடர்ந்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அதிமுகவினருக்கு பேச சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதையடுத்து திமுக ஆட்சியில் போலீஸாருக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்று கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications