ஆண்-பெண் திருமண வயதை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்

முன்னதாக இந்தத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது பேசிய பாமக உறுப்பினர் வேல்முருகன்,
பெண்ணுக்கு 18 வயதானால் அவர் பருவ வயதை எட்டியவராக (மேஜர்) கணக்கி்ல் கொள்ளலாம். ஆனால், ஒரு பெண் குழந்தை பெற 21 வயதை எட்டினால் தான் நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பெண்களின் நலனை கருத்தி்ல் கொண்டு திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும்.
அதே போல ஆண்களின் திருமண வயதை 21ல் இருந்து 25 ஆக உயர்த்த வேண்டும். ஒரு டாக்டரான அமைச்சர் பூங்கோதைக்கு இந்த விவரங்கள் மிக நன்றாகவே தெரியும். எனவே அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த பூங்கோதை, உறுப்பினர் வேல்முருகன் சொல்வதை நான் முழுமையாக ஏற்கிறேன். இது தொடர்பாக கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். முதல்வருடன் ஆலோசித்துவிட்டு நிச்சயம் முடிவு எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் சத்துணவு மையங்களிலும், குழந்தைகள் மையங்களிலும் காலியாக உள்ள 10,327 பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும்.
குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை ஆய்வு செய்து தீர்வு காண மாவட்டந்தோறும் தனி அதிகாரியும் சென்னைக்கு 2 தனி அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்.
சத்துணவு மையங்களில் சரியான முறையில் பொருட்களை எடை போட்டு வழங்க ரூ.50 லட்சம் செலவில் மின்னணு தராசுகள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரவாணிகள் குறித்த கணக்கெடுப்பு விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பு ஏற்படுத்தப்படும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications