பல்லடம் நெசவுப் பூங்கா-சிதம்பரம் திறந்து வைத்தார்!
கோவை: பல்லடத்தில் 65 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள நெசவுப் பூங்காவை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம் பல்லடத்தில் 65 ஏக்கர் பரப்பில் ரூ. 50 கோடி செலவில் இந்த உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இதை திறந்து வைத்து சிதம்பரம் பேசுகையில்,
உலகிலேயே மிக வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. வேகமான வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் நெருக்கடிகளுக்கு அரசு உரிய நேரத்தில் உரிய தீர்வு காணும்.
இந்தியாவில் 30 இடங்களில் அமைக்கப்படும் நெசவுப் பூங்காக்களில், 6 தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக பல்லடத்தில் இந்தப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை, கரூர், குமாரபாளையம், பெருந்துறை, கடலூர் ஆகிய இடங்களிலும் நெசவுப் பூங்காக்கள் திறக்கப்படும்.
இத்தகைய பூங்காக்கள் நாடு முழுவதிலும் தொடங்கப்பட்டால் ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் சுமார் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications