'அரசாங்கம்' கதை யாருடையது-விஜயகாந்துக்கு நோட்டீஸ்
சென்னை: விஜயகாந்த் நடித்துள்ள அரசாங்கம் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராஜபாண்டியன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கு பதிலளிக்குமாறு விஜயகாந்த் மற்றும் படத்தின் தயாரிப்பாளரான அவரது மச்சான் சுதீஷ், இயக்குநர் மாதேஷ் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மே 10ம் தேதி இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய விஜய்காந்த் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவரான ராஜபாண்டியன் தாக்கல் செய்துள்ள மனுவி்ல்,
சென்னை விருகம்பாக்கத்தில் தங்கியிருந்து டிரைவர் வேலைப் பார்த்து வரும் நான் அவ்வப்போது கதை, நாடகங்கள் எழுதி வருகிறேன். விஜயகாந்த் நடித்துள்ள அரசாங்கம் படத்தின் திரைக் கதையும், டைட்டிலும் என்னுடையது. எனவே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
ராஜபாண்டியன் சார்பில் வழக்கறிஞர் ராமநாதன் ஆஜராகி, அரசாங்கம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு விஜயகாந்தின் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
ராஜபாண்டியனின் கதைக்கும், அரசாங்கம்'படத்தின் கதைக்கும் எந்த தொடர்பு இல்லை, இரண்டு கதைகளும் ஒன்றாக உள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்டப்படவில்லை. மேலும் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள படத்தை நிறுத்த முயற்சிப்பது ஒருவித விளம்பர உத்தி.
அரசியல் தூண்டுதல் காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இப் படத்தை நீதிபதி முன் திரையிட்டு காண்பிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் எக்காரணம் குறித்து இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிக்க கூடாது என்று விஜய்காந்தின் வழக்கறிஞர் வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார்.
படத் தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ், இயக்குனர் மாதேஷ், தணிக்கை குழு அதிகாரி மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து சுதீஷ் கூறுகையில்,
விஜயகாந்த் நடிக்கும் ஒவ்வொரு படத்துக்கும் இப்படிப்பட்ட எதிர்ப்புகள் வருவதும் பின்னர் தோற்றுப்போய் ஓடுவதும் வழக்கம்தான். அரசாங்கம் கதை இயக்குநர் மாதேஷினுடையது. மற்றவற்றை நாளை கோர்ட்டில் சொல்லப் போகிறோம். வழக்கு தொடர்ந்த நபர் நிச்சயம் இதற்காக வருத்தப்படப் போகிறார் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications