டாஸ்மாக்கில் போலி மது சப்ளை-6 அதிமுகவினர் கைது
கரூர்: கரூர் மாவட்டத்தில் போலி மதுபானங்களை சப்ளை செய்த அதிமுக நிர்வாகிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலி மதுபானம் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருச்சி டிஐஜி அசோக்குமார்தாஸ் விசாரணைக்கு உத்தரவிட்டதோடு கரூர் சென்று அதிரடி சோதனையிலும் இறங்கினார்.
அப்போது தாந்தோனிமலையில் ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 576 போலி மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை வினியோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட கார், பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் தானேஷ், நகர மாணவர் அணி அமைப்பாளர் கோல்ட் ஸ்பாட் ராஜா, தாந்தோணி நகர செயலாளர் ராயனூர் ரவி, மற்றும் அதிமுக நிர்வகிகள் முத்துகுமார், ராமலிங்கம், சுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் தமிழகம் முழுவதும் இவர்கள் போலி மதுபானங்களை சப்ளை செய்தது தெரிய வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்த 40க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications