டிஎஸ்பியை தாக்கிய திமுகவினர்-நடவடிக்கை கோரி தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

உடுமலைப்பேட்டை: உடுமலைபேட்டையில் நடந்த திமுக நிர்வாகிகள் தேர்தலில் ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற டிஎஸ்பியை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று அங்கு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உடுமலைபேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கான திமுக நிர்வாகிகள் தேர்தல் இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அங்கு வந்த நகர மன்ற தலைவர் வேலுசாமி ஆதரவாளர்களுக்கும் முன்னாள் ஒன்றிய செயலாளர் திராவிட மணி ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.

இதுகுறித்து திராவிட மணி டிஎஸ்பி ஈஸ்வரனிடம் புகார் கொடுத்தார். இரு தரப்பையும் தனது அறையில் வைத்து டிஎஸ்பி ஈஸ்வரன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

அப்போது அவர்களை சமரசம் முயன்ற டிஎஸ்பி ஈஸ்வரன் தாக்கப்பட்டார். அவரது மூக்கு உடைந்தது. இதுகுறித்து எஸ்பி கார்த்திகேயன், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் டி.எஸ்.பி. தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில், அதிமுக, மதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, அகில இந்திய யசமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டிஎஸ்பியை தாக்கியவர்கள் மீது தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த தாக்குதலை கண்டித்து கடையடைப்பு நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உடுமலைப்பேட்டையில் நேற்று கடையடைப்பு நடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+