தமிழகத்தில் அதிகரிக்கும் பி.இ சீட்கள்-ஓரளவு மதிப்பெண் இருந்தாலே சீட்
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூவில் ஓரளவு நல்ல மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்குமே பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 20 சதவீத மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 5 சதவீதத்தினர் எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவக் கல்விகளில் சேர்ந்தனர்.
தமிழகத்தில் 11 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளும் 261 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளும் உள்ளன. இங்குள்ள மொத்த இடங்கள் 1.03 லட்சமாகும். இதில் கடந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 65,000 இடங்கள் இருந்தன.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக மார்க்குகள், கவுன்சிலிங், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனாலும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இருந்த 65,000 இடங்களில் 10,000 இடங்கள் காலியாகவே இருந்தன.
அதே போல தனியார் கல்லூரிகளிலும் பல ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை.
பொறியியல் கல்லூரிகளில் சேர கவுன்சிலிங்குக்கு வந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் சேர விருப்பம் தெரிவித்தது ஐடி, கம்ப்யூட்டர்ஸ் தொடர்பான படிப்புகளில் தான்.
இந் நிலையில் தமிழகத்தில் மேலும் என்ஜினீயரிங் கல்லூரிகளை தொடங்க நூற்றுக்கும் அதிகமானோர் இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் இந்த ஆண்டு எத்தனை பேருக்கு கல்லூரிகள் தொடங்க அனுமதி தரப்படும் என்று தெரியவில்லை. ஆனால், இதில் 25 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தரப்பட்டால் கூட தமிழகத்தில் பொறியியல் கல்வி இடங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும். இதன் மூலம் அரசு ஒதுக்கீட்டு கோட்டாவிலும் எண்ணிக்கை அதிகமாகும்.
இதன்மூலம் பிளஸ் டூவில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் எடுத்தாலே பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைப்பது அதிகரிக்கும்.
சென்ற ஆண்டு 10,000 இடங்கள் காலியாக இருந்ததை கணக்கில் கொண்டால் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் அனைவருக்குமே பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications