வேலூரில் இந்த ஆண்டே சட்டக் கல்லூரி-துரைமுருகன்
சென்னை: வேலூரில் இந்த ஆண்டே சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் நீதி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ ஞானசேகரன், ராஜீவ் கொலையாளி பிரபாகரன் மீதான பிடிவாரன்ட், வைகோ மீதான வழக்கு ஆகியவை எந்த நிலையில் உள்ளன.
வேலூரில் சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என்று ஆலடி அருணா சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது அறிவித்தார். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை. சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வக்கீல்கள் நல நிதி தொடங்கப்பட்டு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கு மேல் எந்த ஒதுக்கீடும் இல்லை. வக்கீல்கள் இறந்தால் வழங்கப்படும் நிவாரண நிதியை ரூ.1 லட்சத்தில் இருந்த 5 லட்சமாக உயர்த்த வேண்டும். அதற்காக ரூ.50 கோடியை ஒரே முறையாக உயர்த்த வேண்டும்.
புதிய நீதிமன்றங்கள் தொடங்கும்போது, உள்ளூர் எம்எல்ஏ, எம்பிக்களுக்களை அழைக்க வேண்டும் என்ற அரசாணை பின்பற்றப்படுவதில்லை. நீதித்துறையில் லஞ்சம்-ஊழலை ஒழிக்கப்பட வேண்டும் என்று ஞானசேகரன் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், வேலூரில் இந்த ஆண்டே சட்டக் கல்லூரி தொடங்கப்படும். புதிய நீதிமன்றம் வேண்டும் என்று சண்டை போட்டு அனுமதி பெறுவது, இடம் தேர்வு செய்யவும், கட்டடம் கட்ட உதவுவதும் எம்எல்ஏக்கள்தான். இவ்வளவு செய்யும் எம்எல்ஏவை திறப்பு விழாவுக்கு வராதே என்றால், நானும் ஒரு எம்எல்ஏ என்ற முறையில் உள்ளம் பாதிக்கிறது.
உச்ச நீதிமன்றக் கிளை தமிழகத்துக்கு வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இன்று இல்லாவிட்டாலும் நிச்சயம் ஒரு நாள் தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைய வேண்டும். அதற்காக இந்த அரசு பாடுபடும் என்றார்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications