பழநி கோயில் நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
பழநி:நிலம் கையகப்படுத்தும் பழநி கோவில் நிர்வாகத்தின் முடிவை கண்டித்து பொது மக்கள் இன்று உண்ணாவிரதம் ற்கொண்டனர்.
பழநி கோயிலை சுற்றி உள்ள நிலங்களை சுற்றுலா மேம்பாட்டிற்காக கையகப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் விவசாயம் பாதிக்கும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வர், இந்து சமய நிலையத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினர்.
இந்நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சாது சுவாமிகள் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications