வெடி மருந்து குடோனில் தீ- 3 பேர் படுகாயம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள வெடி மருந்து குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறி குடோன் உரிமையாளர், அவரது மனைவி, மகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள கஞ்சனூரை சேர்ந்தவர் முகமது யூனுஸ் (73). அரசு உரிமம் பெற்று கோவில் திருவிழாவுக்கு தேவையான வாண வெடிகளை தயாரித்து வழங்கி வந்தார். தனது வீட்டுக்கு அருகிலேயே வெடி மருந்து குடோன் வைத்துள்ளா.
முகமது யூனுசுடன் அவரது மனைவி அஜித்துன்னிசா (60), மகன் பாபு (33) ஆகியோரும் வாண வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை அந்த குடவுனில் தீ பிடித்தது. வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. தீ மளமளவென பரவி கட்டடம் எரிந்தது. முகமது யூனுஸ், அஜித்துன்னிசா, பாபு ஆகியோர் தீயில் சிக்கிக் கொண்டனர்.
அப்பகுதியினர் 3 பேரையும் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்த அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் புதுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித்துன்னிசாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவலறிந்த தாசில்தார் கல்யாணம், துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications