சங்கரநாராயணர் கோயில் கும்பாபிஷேகம்-லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அரியும், சிவனும் ஒன்றென காட்சியளிக்கும் இந்த ஸ்தலம் சூரியன் வழிபட்ட தலமாகும். இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து கடந்த 20ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நாடி சந்தனம், பர்சாஹுதி, மகாபூர்ணஹூதி, யாத்ராதானம், ஆகியவையும் காலை 5 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது.
பின்னர் 5.50 மணிக்கு ராஜகோபுரத்தின் 9 கலசத்திலும், புனித நீர் ஊற்ற சாமி விமானம், சங்கர நாராயணர் சாமி விமானம், அம்மன் விமானம், சண்முகர் விமானம், மேற்கு, தெற்கு, கிழக்கு, சொர்க்க வாசல் கோபுரங்கள் ஆகிய 9 கோபுரங்களிலும் செண்டை மேளம் முழங்க வேதங்கள் முழங்க ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் பிரகாஷ், அவரது மனைவி சிந்துஷா, நீதிபதி பழனிவேல் ராஜன், மாஜிஸ்திரேட் சந்திரா பார்த்தசாரதி, மதுரை ஆதீனம் அருணகிரி நாத சுவாமிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு பரவசமடைந்தனர்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications