மாநிலம் முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணில் ஆம்புலன்ஸ் சேவை
சென்னை: மாநிலம் முழுவதும் ஒரே தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:
அவசர மருத்துவ சிகிச்சைக்கு தமிழகம் முழுவதும் ஒரே தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாகப் பெற, புதிய திட்டம் இந்த ஆண்டில் தொடங்கப்படும். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் இந்த ஆம்புலன்ஸ்கள் சேவை கட்டுப்படுத்தப்படும்.
இந்த ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஆம்புலன்ஸ் சேவையுடன் காவல் துறை மற்றும் தீயணைப்புப் படையினரின் பணிகளும் ஒருங்கிணைக்கப்படும்.
இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துகளில் அதிகமான எண்ணிக்கையில் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க சிறப்பு மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும். மலைவாழ் மக்களுக்காக இந்த ஆண்டு 139 நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்படும்..
அரசு மருத்துவமனைகளின் குறைகளைக் களையவும், செயல்பாடுகளை கவனிக்கவும், 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அறிமுகப்படுத்தப்படும்.
சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆண்டு 2 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 10 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.10 கோடி மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்படும். வேலூர் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.4 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டில் தொடங்கப்படும்.
2008-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6.7 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய மக்கள் தொகையில் 6 சதவீதம் ஆகும் என்று அந்த குறிப்பில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications