கர்நாடகா தியேட்டர்களில் மீண்டும் தமிழ் படங்கள்!
பெங்களூர்: ஒகேனக்கல் குடிநீர்திட்ட பிரச்னை ஓய்ந்துள்ளநிலையில் கர்நாடகா தியேட்டர்களில் மீண்டும் தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
ஒகேனக்கலில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றுவதற்கு கர்நாடக மாநில பாஜ மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில் தமிழ் திரைப்படங்களை திரையிட கன்னட ரக்ஷண வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தமிழ்படங்கள் திரையிடப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. ஒரு சில பகுதிகளை தவிர கேபிளில் தமிழ் டிவி சேனல் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது.
இதனிடையே இந்த பிரச்னையை கண்டித்து நடிகர் ரஜினி கொடுத்த 'வாய்ஸ்' மற்றும் கர்நாடக தேர்தலை முன்னிட்டு ஒகேனக்கல் பிரச்னை ஒய்ந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில் மீண்டும் தமிழ் படங்களை திரையிடத் துவங்கியுள்ளனர்.
பெரிய விளம்பர பேனர்கள் மற்றும் பத்திரிகை, டிவி சேனல்களில் விளம்பரப்படுத்தாமல் சந்தடிசாக்கில் தமிழ்படங்களை பெங்களூர் தியேட்டர்கள் திரையிட்டுள்ளன. கன்னட ஆதரவு அமைப்புகளின் வெறுப்பை இதன்மூலம் சாமர்த்தியமாக தவிர்த்துள்ளனர்.
இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ள தடையை நீக்குமாறு கன்னட திரையுலகினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகாவில் தமிழ்படங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் திரையிடுவதற்கு உறுதியும் அளித்தனர்.
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் சிட்டியில் உள்ள 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ்படங்கள்தான் பெரும்பாலும் திரையிடப்படுகின்றன. கன்னட ரசிகர்களும் தமிழ்படங்களையே அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். கன்னட மொழியில் வெளியாகும் புதிய படங்களில் பெரும்பாலும் தமிழ்படங்களின் தழுவலாகவே இருக்கும். இதனால் பெங்களூர் நகர சினிமா ரசிகர்களை தமிழ்படங்கள்தான் நீண்டகாலமாவே தம்வசம் கட்டிப்போட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications