+2 மார்க் ஷீட் திருத்தம்: மாணவருக்கு ஓராண்டு சிறை
நெல்லை: பிளஸ் டூ மதிப்பெண் பட்டியலை திருத்தி மோசடியாக கல்லூரியில் சேர்ந்த வழக்கில் மாணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த வேதநாயகம் மகன் விக்டர் ஜெயராஜ். இவர் கடந்த 1997ம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்தார். பொதுத் தேர்வில் அவருக்கு 549 மார்க் கிடைத்தது.
வரலாறு பாடத்தில் 28 மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் விக்டர் ஜெயராஜ் தனது சான்றிதழில் வரலாறு பாடத்தில் எடுத்த மதிப்பெண் 28ஐ 175 ஆகவும், மொத்த மதிப்பெண் 549ஐ 696 ஆகவும் திருத்தி பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் 1998-99ம் கல்வியாண்டில் பி.ஏ சேர்ந்தார்.
சில காலம் கழித்து சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகம் விக்டர் ஜெயராஜின் மதிப்பெண் சான்றிதழை சென்னை அரசு தேர்வு துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பியது. அதில் அவரது மதிப்பெண் பட்டியல் திருத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து கல்லூரியின் தேர்வு இயக்குநர் நெல்லை மாநகர குற்றப்பிரிவு விக்டர் ஜெயராஜ் மீது புகார் செய்தார். போலீசார் அவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நெல்லை குற்றவியல் முதலாவது கோர்ட்டில் நடந்தது. வழக்கை மாஜிஸ்திரேட் ஜெசிந்தா மார்டின் விசாரித்து விக்டர் ஜெயராஜுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து விக்டர் ஜெயராஜ் சிறையிலடைக்கப்பட்டார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications