இன்று முதல் மீண்டும் மக்கள் ஓசை வெளியாகிறது

மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழ் மக்கள் ஓசை. சமீபத்தில் இந்த நாளிதழின் உரிமத்தை புதுப்பிக்க அரசு மறுத்து விட்டது. விதிமுறைகளை மீறும் வகையில் மக்கள் ஓசை செயல்படுவதாக கூறி உரிமத்தைப் புதுப்பிக்க மலேசிய உள்துறை அமைச்சகம் மறுத்து விட்டது.
இதையடுத்து விதிமுறைகளுக்குப் புறம்பாக இனி நடக்க மாட்டோம் என மக்கள் ஓசை நிர்வாகம் அரசிடம் மன்னிப்பு கோரியது. இதையடுத்து மீண்டும் மக்கள் ஓசைக்கு உரிமம் வழங்கி அரசு உத்தரவிட்டது. வியாழக்கிழமை மக்கள் ஓசைக்கு உரிமம் புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மக்கள் ஓசை ஊழியர்கள் தங்களது அலுவலகம் முன்பு திரண்டு உற்சாகமாக அதை வரவேற்றனர். இரு விரல்களைக் காட்டி வெற்றி என முழக்கமிட்டனர். மக்கள் ஓசை நாளிதழ் இன்று முதல் மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து செய்தித்தாளின் பொது மேலாளர் எஸ்.ஆர்.பெரியசாமி கூறுகையில், உரிமத்திற்கான கட்டணத்தை கட்டி விட்டோம். உரிமம் வழங்குவது தொடர்பான கடிதமும் உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்து விட்டது.
வம்சாவளி இந்தியர்களின் நலனுக்காக தொடர்ந்து மக்கள் ஓசை சேவையாற்றும். இன நல்லிணக்கத்தை மேம்படுத்த மக்கள் ஓசை பாலமாக விளங்கும் என்றார் பெரியசாமி.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications