சேப்பாக்கத்தில் விஜய்யுடன் கமல்: ரசிகர்கள் உற்சாகம்

2 அணிகளில் ஹாட்ரிக் வெற்றியை யார் குவிப்பார்கள் என்ற நிலையில் நடந்த நேற்றைய ஆட்டத்தின்போது கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாத ரசிகர் வெள்ளத்தால் மைதானம் நிரம்பி வழிந்தது.
சென்னை கிங்ஸ் வீரர்கள் பெவிலியனில் அதன் பிராண்ட் அம்பாசிடர் நடிகர் விஜய் தன் மகனுடன் வந்து வீரர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.
அப்போது திடீர் என்று பெவிலியன் பகுதிக்குள் நடிகர் கமல்ஹாசன் தோன்றினார். இதை தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களின் உற்சாக கரகோஷத்தில் மைதானம் அதிர்ந்தது.
அதற்கு முந்தையநாளில்தான் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை வைத்து தசாவதாரம் ஆடியோவை வெளியிட்டு சென்னையை அதிரவைத்திருந்தார் கமல்ஹாசன். உலகில் வேறு எந்த நடிகரும் நடித்திராத வகையில் இந்த படத்தில் 10 வேடங்களில் கமல் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல் டிரம்மர் சிவமணி தனது அதிரடி இசையால் ரசிகர்களின் உற்சாகத்துக்கு கூடுதல் ரிதம் சேர்த்தார்.
ஆட்டம் துவங்குவதற்கு முன்பு 2 மணிநேரமாக பெவிலியனில் ஆட்டம் பாட்டம் தூள் பறந்தது. போலீஸ் எச்சரிக்கையடுத்து வெளிநாட்டு நடன மங்கைகளின் ஆட்டத்தில் கவர்ச்சி கொஞ்சம் அடக்கியே வாசிக்கப்பட்டது.
-
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக!












Click it and Unblock the Notifications