கடலூர் வாலிபர் கொழும்பில் மர்ம மரணம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கூலி வேலைக்காக கொழும்பு சென்ற கடலூர் மாவட்ட வாலிபர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனால் அவரது உடல் இருந்த சவப்பெட்டியுடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் முதுநகர் வசந்தராபாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் அன்பரசன், சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கண்ணாடியில் டிசைன் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக கொழும்பிலும் ஒரு நிறுவனம் உள்ளது. இங்கு வேலைக்கு ஆள் தேவைப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசனை சென்னை நிறுவனம் கொழும்புக்கு அனுப்பியது.

கடந்த 2 வருடமாக கொழும்பில் வேலை பார்த்து வந்தார் அன்பரசன். டூரிஸ்ட் விசாவில்தான் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தமிழகம் வந்த அவர் பின்னர் மீண்டும் டூரிஸ்ட் விசா மூலம் கொழும்பு சென்றார். விசாக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிந்துள்ளது. ஆனால் அவரை கொழும்பு நிறுவனம் திருப்பி அனுப்பவில்லை.

இந்த நிலையில் கடந்த 22ம் தேதி அன்பரசன் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் வந்தது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, அன்பரசனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உடல் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று அன்பரசனின் உடல் சென்னை வந்து சேர்ந்தது. அவரது உறவினர்கள் உடலைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர்கள், அன்பரசனை கொழும்பு வேலைக்கு அனுப்பி வைத்த சென்னை நிறுவனத்தைச் சேர்ந்த சுகதாஸ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

ஆனால் கொழும்பில் நடந்த சம்பவத்திற்காக சென்னையில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று போலீஸார் தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து உடலுடன் கடலூர் திரும்பிய அன்பரசன் உறவினர்கள் அங்கு கடலூர் - சிதம்பரம் சாலையில் ஆம்புலன்ஸை நடு ரோட்டில் நிறுத்தி சவப்பெட்டியை தரையிறக்கி மறியலில் இறங்கினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனர். இதையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. பிறகு டிஎஸ்பி உத்தரவின் பேரில் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அன்பரசனின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+