என்ஐடி, ஐஐஐடி நுழைவுத் தேர்வு-8.5 லட்சம் பேர் எழுதினர்
சென்னை: திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (என்ஐடி) உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள், ஐஐஐடி உள்ளிட்டவற்றுக்கான நுழைவுத் தேர்வு நடந்தது. அகில இந்தியஅளவில் நடைபெற்ற இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கான மாணவர் சேர்க்கை தற்போது மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட் நாடு முழுவதும் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள், ஐஐஐி எனப்படும் இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
2008-09ம் ஆண்டுக்கு, நாடு முழுவதும் உள்ள 36 கல்வி நிறுவனங்களில் மொத்தம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில் எட்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று இந்தத் தேர்வு நாடு முழுவதும் நடந்தது. சென்னையிலும் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதினர்.
கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. தேர்வு பொதுவாக எளிதாக இருந்ததாகவும், கணிதப் பாடம் மட்டும் சற்று கடினமாக இருந்ததாகவும் மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications