சேலம் சிறையில் ஜான் பாண்டியன் திடீர் உண்ணாவிரதம்
சேலம்: சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான் பாண்டியன் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். இதேபோல அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென்காசி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற ஜான் பாண்டியன் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல தென்காசியில் நடந்த கொலைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அலாவுதீன் உள்ளிட்ட 9 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு சிறையில் உள்ள டிவியில் அதிக சத்தம் வைத்து கைதிகள் டிவி பார்த்துள்ளனர். இதற்கு தென்காசி கைதிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜான் பாண்டியன் அறையில் தங்கியுள்ள கண்ணன், பாபநாசம் ஆகியோருக்கும், தென்காசி கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து பாபநாசத்தை வேறு சிறைக்கு அதிகாரிகள் மாற்றினர். இந்த சம்பவம் நடந்தபோது ஜான் பாண்டியன் வழக்கு விசாரணைக்காக நெல்லை கோர்ட்டுக்கு போயிருந்தார்.
திரும்பி வந்த அவர், பாபநாசத்தை மறுபடியும் தனது அறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உண்ணாவிரதத்தில் குதித்தார். அதேபோல ஜான் பாண்டியனை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி தென்காசி கைதிகள் 9 பேரும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதனால் சேலம் சிறையில் பதற்றம் நிலவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications