ஜூன் 2 முதல் 8 வரை நாகையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நாகப்பட்டிணத்தில் ஜூன் 2 முதல் 8ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடக்கிறது.

இதுகுறித்து திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் சஞ்சீவ்குமார் கூறுகையில்,

சோல்ஜர் டெக்னிகல் மற்றும் நர்சிங் அசிஸ்டென்ட் பிரிவுகளுக்கு ஆள் சேர்ப்பு நாகையில் நடக்கிறது. நாகை மாவட்ட விளாயாட்டு மைதானத்தில் ஜூன் 2 முதல் 8ம் தேதி வரை இதற்கான முகாம் நடக்கிறது.

17 முதல் 23 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 2ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, 3ம் தேதி உடல்தகுதி தேர்வுகள் நடத்தப்படும்.

பெரம்பலூர், அரியலூர், திருச்சி,. கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாக்குமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு சோல்ஜர் ஜெனரல் பணிக்கு 3ம் தேதி தேர்வு நடக்கும்.

இதே பிரிவில் 4ம் தேதி முகாமில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

சோல்ஜர் ட்ரேட்ஸ்மேன் பிரிவுக்கு 5ம் தேதியும், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பிரிவுக்கு 6ம் தேதியும் 14 மாவட்டத்தினருக்கு நடக்கிறது.

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 சான்றிதழ், ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் கொண்டு வர வேண்டும். விளையாட்டு, என்சிசி சான்றிதழ்களும் கொண்டு வரலாம்.

முன்னாள் ராணுவ வீரர்கள், விதவைகளின் மகன்கள், போரில் இறந்த படைவீரரின் மகனாக இருந்தால் உறவுமுறை சான்றுகள் மற்றும் 8 போட்டோக்களுடன் காலை 5.30 மணிக்கு வர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+