போதை பொருள் கடத்தல்-சீனாவில் 2 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த சுல்தானின் மகன் சலீம்கான் ( 28) கடந்த 1998ம் ஆண்டு வைரம் தரம் பிரிக்கும் வேலைக்காக பாங்காக் சென்றார்.
2004ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய இவருக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணம் தொடர்பாக சலீம் கானுக்கும், தந்தை சுல்தானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சலீம்கான் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு மீண்டும் வெளிநாடு சென்றார். ஆனால், அவர் எங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்தது.
இந் நிலையில் சலீம் கான் சீனாவில் போதை மருந்து கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக சுல்தானுக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. சலீமுடன் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தை சேர்ந்த அஸ்கர் என்பவரும் சிக்கியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தியதாக இருவருக்கும் சீன அரசு தூக்கு தண்டனை விதித்துள்ளது.
இந் நிலையில் சில நாட்களுக்கு அஸ்கரின் சகோதரர் சையத் மற்றும் அவரது உறவினர்கள் சுல்தானை சந்தித்து, அஸ்கர் தூக்கு தண்டனை பெற்றதற்கு உங்கள் மகன்தான் காரணம். இதனால் ரூ. 3 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று சுல்தானை மிரட்டியதாகத் தெரிகிறது.
இதையடுத்து சுல்தான் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சஞ்சீவ்குமாரிடம் புகார் தந்தார். பேக்ஸ் மூலம் தரப்பட்ட அந்த புகாரில்,
சீனா நாட்டு சிறையில் மரண தண்டனை கைதியாக உள்ள 2 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனை காரணம் காட்டி, சையது மற்றும் அவரது உறவினர்கள் சிலர் என்னிடம் பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து விசாரிக்க ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications