ராகுலை பின்பற்ற பெனாசிர் மகனுக்கு இம்ரான் அட்வைஸ்
காத்மாண்டு: ராகுலை போல பெனாசிர் மகன் பிலாவலும் அரசியல் வாழ்க்கையை அடிப்படையில் இருந்து தொடங்க வேண்டும் என்று இம்ரன் கான் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வதியாகிவிட்ட இம்ரான் கான் அளித்துள்ள பேட்டியில்,
வீட்டையோ, நகையையோ பரம்பரை சொத்தாக்கலாம். ஒரு ஜனநாயக அரசியல் கட்சியை பரம்பரை சொத்துப்போல அறிவிப்பது ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் செயல். மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் எப்படி பரம்பரை சொத்தாக்கலாம்?
இந்தியாவில் ராகுல் காந்தி செய்வதை போல கீழ்நிலையில் இருந்து அரசியல் வாழ்க்கையை பிலாவல் தொடங்கினால்தான் அவரது அரசியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பதவியில் தொடர சட்டரீதியான உரிமை முஷாரப்புக்கு இல்லை. அவர் எப்போதுமே தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
நாடாளுமன்றத்துக்குள் அவரை திணித்துக் கொண்டார். ஆனால் அந்த நாடாளுமன்றம் தற்போது இல்லை. தேர்தலுக்கு பிறகு அமைந்த நாடாளுமன்றத்தில் அவருக்கு அங்கீகாரம் இல்லை. எனவே அவர் பதவி விலக வேண்டும். தேர்தலில் நவாஸ் ஷெரீப்புக்கும், ஆசிப் அலி ஜர்தாரிக்கும் மிகப் பெரிய வாய்ப்பை மக்கள் அளித்துள்ளனர். அதை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும்.
பிரபல விளையாட்டு வீரராக இருந்தும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்துக்கு என்னை அழைக்காதது எனக்கு வருத்தமில்லை. முஷாரப்புடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனக்கு வெறுப்பானதாகத்தான் இருக்கும் என்றார் இம்ரான்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications