மதுரை மாநகராட்சியில் அஜண்டா கிழிப்பு-சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அஜண்டாவை கிழித்த மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் 3 பேர் சஸ்பென்ட் செய்யப்ட்டனர். இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் தேன்மொழி கோபபிநாதன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், மன்ற அவசர கூட்ட அஜண்டாவில் ரூ.252 கோடிக்கு மழை நீர் வடிகால் திட்டத்திற்கு டெண்டர் ஒப்புதல் அளித்து வேலை உத்தரவு வழங்குவது உள்பட முக்கிய தீர்மானங்கள் உள்ளன.
அந்த அஜண்டாவை படிக்க கூட நேரம் இல்லாமல் நேற்று இரவுதான் கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று புகார் கூறினர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் திடீரென்று அஜண்டாவை கிழித்தெறிந்தனர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் குரல் கொடுத்தனர்,
சிறிது நேரத்தில் அதிமுக, மார்க்சிஸ்ட், தேமுதிக, மதிமுக கவுன்சிலர்கள் மேயர் தேன்மொழி இருக்கையை முற்றுகையிட்டனர். இதையடுத்து மன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது.
அப்போது பேசிய மேயர் தேன்மொழி, அஜண்டாவை கிழித்தது தவறு. மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் கணேசன், திலகர், செல்லம் ஆகியோர் அஜண்டாவை கிழித்தற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மறுத்தனர். இதையடுத்து அவர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து, வெளியேற்ற சபை காவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். அவர்களை வெளியேற்ற காவலர்கள் முயன்றதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் 7 பேரும் வெளியேறினர். சிறிது நேரம் கழித்து மீண்டும் வர முயன்றபோது, மன்ற காவலர்கள் அவர்களை வரவிடாமல் கதவை மூடினர்.
இதையடுத்து அவர்கள் 7 பேரும் மாநகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். தங்களை பேச விடாமல் தடுப்பதாக புகார் கூறி அதிமுக, மதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications