கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் பலி-நர்ஸ் கைது
புதுக்கோட்டை: முறையாக கருகலைப்பு செய்யாததால் பெண் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வேளாடிபட்டியை சேர்ந்தவர் சாராய வியாபாரி ராஜாங்கம். கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவரது மனைவி மகமாயி (30). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் மகமாயி கர்ப்பமானார்.
கருவை கலைக்க ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றும் செந்தாமரையிடம் சென்றார். நர்ஸ் செந்தாமரையும், மகமாயிக்கு கருக்கலைப்பு செய்தார். ஆனால் சரியாக செய்யவில்லை என்று ெதரிகிறது.
இதையடுத்து மகமாயிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது. உடனடியாக அவரை தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மகமாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நர்ஸ் செந்தாமரையை கைது செய்தனர்.
ஏற்கனவே செந்தாமரை மீது தவறான முறையில் கருகலைப்பு செய்தது தொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications