சென்னையில் மார்வாடியைக் கடத்தி ரூ.2 லட்சம் பறிப்பு
சென்னை: சென்னையில் மார்வாடியை கடத்தி ரூ. 2 லட்சத்தைப் பறித்துக் கொண்டு, அவரை மூட்டையில் கட்டி கடலுக்கு அருகே போட்டுவிட்டுப் போன கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த மார்வாடியான அனில்குமார் மணலியில் மணல் விற்பனை செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி இவர் திருவொற்றியூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்றார்.
ஆனால், அன்றிரவு வீடு திரும்பாததால் அவரது மனைவி பூஜா மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இரண்டு நாட்களாக அவரை தேடி வந்தனர்.
இந் நிலையில் நேற்று திருவொற்றியூர் கடலோர பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதிலிருந்து முனகல் சத்தம் கேட்டதையடுத்து மீனவர்கள் அதை பிரித்தனர்.
அதற்குள் அனில்குமார் ரத்த காயங்களுடன் இருந்தார். இதையடுத்து போலீசுரக்க தகவல் தெரிவித்துவிட்டு அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் அனில்குமாரிடம் விசாரி்த்தபோது,
கடந்த 29ம் தேதி ரூ.2.2 லட்சம் பணத்துடன் திருவொற்றியூர் சாத்தங்காடு சத்தியமூர்த்தி நகர் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றேன். அப்போது யாரோ கட்டையால் என் தலையின் பின்பக்கம் ஓங்கி அடித்தனர்.
அதில் மண்டை உடைந்து நான் மயங்கி விழுந்தேன்.
லேசாக மயக்கத்தில் இருந்த என்னை ஒரு காரில் தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர். எங்கோ ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்தனர்.
நான் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு என்னை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து வந்து கடலுக்குள் போட முயன்றுள்ளனர்.
ஆனால் ஏனோ கடலோரத்திலேயே போட்டு விட்டு போய் விட்டனர் என்று கூறியுள்ளார்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications