மதுரை அருகே ஜல்லிக்கட்டு: 60 பேர் காயம்
மதுரை: மதுரை மேலூர் அருகே நடைபெற்ற ஜல்லிகட்டில் காளைகள் முட்டி வீரர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள முக்கம்பட்டி சிவநாயகி அம்மன் கோவில் திருவிழாவை நடந்து வருகிறது. இதை முன்னி்ட்டு அங்கு நேற்று ஜல்லிகட்டு நடந்தது.
இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கேட்டை, திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. வாடி வாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்க முயன்றனர்.
இதில் காளைகள் முட்டி 5 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். வேடிக்கை பார்க்க வந்தவர்களில் 55 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காளைகளை அடக்கியவர்களுக்கு சைக்கிள், வெள்ளி காசு, அண்டா, குத்து விளக்கு போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை காண ஏராளமானோர் வந்திருந்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications