மதுரை பாமக பிரமுகர் வீட்டில் மீண்டும் வெடிகுண்டுப் புதையல்!
மதுரை: மதுரை அவனியாபுரம் அருகே பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் இளஞ்செழியனின் தோட்ட இல்லத்தில் மீண்டும் பெருமளவிலான நாட்டு வெடிகுண்டுகள், சிவப்பு பாஸ்பரஸ், வேதிப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இளஞ்செழியனின் சகோதரர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் மாநில பாமக துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். 8வது வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார்.
இதே பகுதியில் இவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு சில மாதங்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டு தயாரித்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி, சிவகாசி மாரீஸ்வரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இருவரையும் படுகாயமடைந்த நிலையில் போலீஸார் கைது செய்தனற். இவர்களுக்கு ரகசிய சிகிச்சை அளித்த டாக்டர் ஞானகுருவும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் இளஞ்செழியனின் தோட்டத்தில் வெடிகுண்டுகள் புழங்குவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். அங்குள்ள ஒரு வாழை மரத்திற்குப் பின்னால் மண்ணுக்குள் நான்கு நாட்டு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ேமலும் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் சல்பர், பாஸ்பரஸ் உள்ளிட்டவையும் இருந்தன. மேலும் சில வேதிப் பொருட்களும் காணப்பட்டன. அனைத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து உடனடியாக இளஞ்செழியனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர், இதுகுறித்து எனக்குத் தெரியாது. எனக்குப் பிடிக்காதவர்கள் செய்த சதி இது என்று கூறினார்.
இருப்பினும் இளஞ்செழியனை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இளஞ்செழியனின் சகோதரர் இருளப்பன், நண்பர்கள் முருகன், கருப்பு ஆகியோரை விருதுநகர் மாவட்டம் மெய்யனூத்துப் பட்டி அருகே வைத்துப் பிடித்து மதுரை கொண்டு வந்தனர்.
இவர்கள் 3 பேரையும் பெருங்குடி காவல் நிலையத்தில் ைவத்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
முன்னதாக பிடிபட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைத்து அழிக்கப்பட்டன.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications