திதி கொடுக்க வந்தவர் சுருளி அருவியில் விழுந்து பலி
தேனி: சுருளி அருவியில் திதி கொடுக்க வந்த வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான சுருளி அருவி உள்ளது. இந்த அருவியின் இயற்கை காட்சிகளை ரசிக்கவும், குளித்து மகிழவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்டம் அலைமோதுகின்றது. சுருளி அருவியின் மேலே செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி அருகே வாழவைத்துப்பட்டியைச் சேர்ந்த ஆண்டிமூப்பன் என்பரின் மகன் ரமேஷ் (20) தனது பாட்டிக்கு திதி கொடுக்க உறவினர்களுடன் சுருளி அருவிக்கு வந்தார்.
அருவியில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளிப்பதற்காக ரமேஷ் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயமாடைந்த அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications