'யுஎப்ஓ'?: பறக்கும் பெண் ணால் மெக்சிகோவில் பரபரப்பு

கடந்த 2006ம் ஆண்டு மே 15ம் தேதி இந்த மர்ம உருவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. மெக்சிகோவின் நுவோ லியான் மலைப் பகுதியில்தான் இந்த காட்சி பதிவாகியுள்ளது. விண்ணிலிருந்து பறந்தபடி வந்து இறங்குகிறது அந்த மர்ம உருவம். பார்க்க பெண் போலவே அது இருக்கிறது.
மலையில் இறங்கும் அந்த உருவம், அப்படியே மலைத் தொடரில் அங்கிமிங்கும் பறக்கிறது. ஒரு மலையின் உச்சியில் நடந்தபடி செல்லும் அந்த உருவம் ஒரு கட்டத்தில் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது.
2006ம் ஆண்டு இந்த உருவம் அடிக்கடி பறந்து சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துக் கூறினர். ஆனால் அதை யாரும் நம்பவில்லை. ஆனால் மே 15ம் தேதிதான் இந்தக் காட்சி வீடியோவில் பதிவாகியது. அதன் பின்னரே இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மர்ம உருவம் யார் என்பதில் பெரும் சர்ச்சை நிலவியது. ஆனால் இது பெண்தான் என்று பல ஆய்வாளர்களும் அடித்துக் கூறுகின்றனர். இந்த வாதம் உண்மையாக இருக்கக் கூடும் என்று மெக்சிகோவைச் சேர்ந்த பறக்கும் பொருட்கள் குறித்த ஆய்வாளர் அன்னா லூசியா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் அது ஒரு பெண்ணாக இருக்கக் கூடும். தலையில் அந்தப் பெண் தொப்பி அணிந்துள்ளார். இது நிச்சயம் மனித உரும்தான். இந்தக் காட்சியை 40 பேர் நேரில் பார்த்துள்ளனர். நுவோயிலோனைச் சேர்ந்த பறக்கும் பொருள் குறித்த ஆய்வு கிளப்பைச் சேர்ந்தவர்கள்தான் இதை வீடியோவில் படமாக்கியுள்ளனர் என்கிறார்.
இதையடுத்து இந்த மர்ம உருவம் குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது. அந்த உருவம் உண்மையிலேயே பெண்தானா, அப்படியானால் அவர் எங்கிருந்து வந்தார், வேற்றுகிரக வாசியா என்ற ரீதியில் விசாரணைகளும், ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications