எரிந்த விடைத்தாள்கள் சென்னைக்கு மாற்றம்
வேலூர்: வேலூர் பள்ளியில் தீவிபத்தில் சேதமடைந்த பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள், சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சென்னையில் இந்த விடைத்தாள்கள் திருத்தப்படவுள்ளன.
வேலூர் ஊரீஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 24-ந் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த, விழுப்புரம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 12,888 ஆங்கிலம் இரண்டாம் விடைத்தாள்கள் சேதமடைந்தன.
பெருமளவிலான விடைத்தாள்கள் சேமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பின. இந்த நிலையில், சென்னையில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, எரிந்த விடைத்தாள்களின் சாம்பல் துகள்களை ஆய்விற்காக சென்னைக்கு எடுத்துச் சென்றனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த 1-ந் தேதி அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம், வேலூர் முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பிச்சை ஆகியோர் தீ விபத்து நடந்த அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தீப்பிடித்து எரிந்த விடைத்தாள்களை பார்வையிட்டனர். அப்போது பெரும்பாலான விடைத்தாள்கள் லேசான சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அதிக அளவில் சேதம் அடையாத விடைத்தாள்களை சென்னைக்குக் கொண்டு சென்று திருத்த தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்தெடுத்த அதிகாரிகள் அவற்றை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications