பிறந்தது புதுக் கட்சி பெரியார் அதிமுக!
சென்னை: மதிமுகவிலிருந்து விலகிய சிலர் என்.எஸ்.தேவன் என்பவர் தலைமையில் பெரியார் அதிமுக என்ற புதுக் கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
திமுகவிலிருந்து பிறந்தது அதிமுக. பின்னர் வந்தது மதிமுக. இப்போது மதிமுகவிலிருந்து பிரிந்த சிலர் சேர்ந்து பெரியார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் கட்சியின் நிறுவனத் தலைவராக என்.எஸ்.தேவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று பிறந்த இக்கட்சி குறித்து தேவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கொள்கை மற்றும் நேர்மையை காப்பாற்றத் தவறிவிட்டார். என்று கொள்கையை வைகோ விட்டாரோ, அப்போதே நாங்களும் விலகி விட்டோம்.
உட்கட்சி பூசலை தீர்க்க வைகோ தவறிவிட்டார். எனவே நாங்கள் அங்கு இருக்க விரும்பவில்லை. தனி நபர்களுக்குத்தான் மதிமுகவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுகுறித்து வைகோவிடம் கேட்டோம். ஆனால் அவர் சரிவர பதில் தரவில்லை.
எனவேதான் பெரியார், அண்ணா பெயரில் பெ.அ.தி.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளோம்.
மேலே கருப்பு - கீழே கருப்பு - நடுவில் சிவப்பு:
எங்களது கட்சிக் கொடி மேலே மற்றும் கீழே கருப்பு நிறமும், நடுவில் சிவப்பும் கொண்டதாக இருக்கும்.
கட்சியின் பொதுச் செயலாளராக வெங்கட் செயல்படுவார். சுரேஷ்பாபு பொருளாளர். துணைச் செயலாளர்களாக சங்கர், குப்புசாமி ஆகியோர் செயல்படுவார்கள்.
சென்னையில் மட்டும் 100 பேர் சேர்ந்து இக்கட்சியைத் தொடங்கியுள்ளோம். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள மதிமுக அதிருப்தியாளர்கள் எங்களது கட்சியில் இணைவர்.
எங்களது கட்சிக் கொள்கைகளை, அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்படும் பொதுக் கூட்டத்தில் விளக்கிக் கூறப் போகிறோம் என்றார் தேவன்.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications