கரோலினாவில் ஒபாமா வெற்றி - ஹில்லாரிக்கு இன்டியானா
வாஷிங்டன்: வடக்கு கரோலினா மாகாணத்தில் நடந்த வாக்கெடுப்பில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார். இன்டியானா மாகாணத்தில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் பெரும் இழுபறி நீடிக்கிறது. பாரக் ஒபாமா வாக்குகள் அடிப்படையில் முன்னணியில் உள்ளார். அடுத்த இடத்தில் ஹில்லாரி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு குவாம் தீவில் நடந்த வாக்கெடுப்பில் ஒபாமா வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் வடக்கு கரோலினா மற்றும் இன்டியானா மாகாணங்களில் நடந்த வாக்கெடுப்பில் இருவருக்கும் தலா ஒரு வெற்றி கிடைத்துள்ளது. வடக்கு கரோலினா மாகாணத்தில் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இன்டியானாவை ஹில்லாரி வென்றுள்ளார்.
வடக்கு கரோலினா மாகாணத்தில் வென்றதன் மூலம் ஒபாமாவுக்கு வாக்குகள் கூடியுள்ளது.
வடக்கு கரோலினாவில் ஒபாமாவுக்கு 56 சதவீத வாக்குகளும், ஹில்லாரிக்கு 42 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இன்டியானாவில் ஹில்லாரிக்கு 51 சதவீத வாக்குகளும், ஒபாமாவுக்கு 49 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
மொத்தமாக தற்போது ஒபாமாவுக்கு 1803 வாக்குகள் உள்ளன. ஹில்லாரிக்கோ 1653 வாக்குகளே உள்ளன. 2025 வாக்குகள் பெறுபவரே வேட்பாளராக தேர்வு பெற முடியும். இன்னும் 6 மாகாணங்களில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டியுள்ளது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications