நர்கீஸ் புயல்: பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
மியான்மர்: கடந்த வாரம் மியான்மரை தாக்கிய நர்கீஸ் புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.
தமிழகத்தை அச்சுறுத்திய நர்கீஸ் புயல் திசைமாறி கடந்த 3ம் தேதி மியான்மரை மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் பயங்கரமாகத் தாக்கியது. தலைநகர் யாங்கூன் மற்றும் அருகில் உள்ள தீவுகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்நாட்டு நெற்களஞ்சியமான இர்ரவாடி டெல்டா பகுதிகள சின்னாபின்னமாகின. பொகாலே என்ற நகரமே அடியோடு அழிந்துபோனது.
முதலில் 4000மாக இருந்த இறந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, காணாமல் போன 40,000ம் பேரின் கதி என்னாயிற்று என்று தெரியவில்லை.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் குடிநீர் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்குள் மீட்பு குழுவினரால் செல்ல முடியவில்லை.
இந்நிலையில் மியான்மர் நாட்டுக்கு உதவ பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. பிளாஸ்டிக் ஷீட்கள், தண்ணீரை சுத்தமாக்கும் மருந்துகள், சமையல் கருவிகள், கொசு வலைகள், சுகாதார கருவிகள், உணவு, மருந்து, போர்வைகள், உடைகள் போன்ற அத்யாவசிய பொருட்கள் அதிகளவில் தேவைப்படுவதாக யாங்கூனில் உள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியா நிவாரணம்:
இந்நிலையில், 'ஆபரேஷன் சஹாயத்' என்ற பெயரில் மியான்மருக்கு மீட்பு உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. மக்கள் தங்குவதற்கான கூடாரங்கள், உணவு மற்றும் மருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு ஐஎன்எஸ் ராணா, கிர்பான் ஆகிய இந்திய போர்க் கப்பல்கள் மியான்மர் தலைநகர் யாங்கூனை சென்றடைந்தன.
இதுதவிர மேலும் 2 விமானப்படை சரக்கு விமானங்களில் கூடுதல் மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் அடங்கிய நிவாரணப்பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
தொடர்ந்து நிவாரணப் பொருள்களை விமானங்கள் மூலம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாகச் செய்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications